» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையம் முன்பு பேருந்துகள் நின்று செல்ல வேண்டும்: அரசு போக்குவரத்துக் கழகம் உத்தரவு!

செவ்வாய் 3, டிசம்பர் 2024 4:53:57 PM (IST)

துாத்துக்குடி வாகைக்குளம் விமானத்தளம் முன்பான பேருந்து நிறுத்துத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி மண்டலம் பொது மேலளார் வெளியிட்ட சுற்றறிக்கை, "திருநெல்வேலி - துாத்துக்குடி பிரதான சாலையிலுள்ள வாகைகுளத்திற்கும்- மங்களகிரிக்கும் இடையே அமைந்திருக்கும் "வாகைக்குளம் விமானத்தளம் " முன்பான பேருந்து நிறுத்துமிடத்தில் அவ்வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி / தூத்துக்குடி மண்டலங்களை சார்ந்த சாதாரண / SFS மற்றும் 1 TO 1 புறநகரப் பேருந்துகள் அனைத்தையும் கண்டிப்பாக நிறுத்தம் செய்து பயணிகளை மறுக்காமல் ஏற்றி / இறக்கி சென்று வர ஓட்டுனர் / நடத்துனர்கள் அனைவருக்கும் உத்தரவிடப்படுகிறது. இவ்வுத்தரவு உடனடியான அமுலுக்கு வருகிறது.

மேலும் இது குறித்து குறிப்பிட்ட புகார்கள் வரப்படின் சம்பந்தப்பட்ட ஓட்டுனர் / நடத்துனர் மீது தகுந்த ஒழுங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  துாத்துக்குடி விமானத்தளம் முன்பான பேருந்து நிறுத்துத்தில் பேருந்து நின்று செல்ல வேண்டும் என ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சண்முகையா கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து

ஒருவன்Dec 3, 2024 - 05:45:06 PM | Posted IP 172.7*****

விமானத்தில் இருந்து வந்த பயணிகளுக்கு பஸ்சில் உட்கார சீட் கிடைக்குமா? அதுக்கு விமான நிலையத்துக்கு தனியாக பேருந்து அமைத்தால் நல்லா இருக்கும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory