» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா: நலதிட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்!

செவ்வாய் 3, டிசம்பர் 2024 4:31:09 PM (IST)



தூத்துக்குடியில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு ரூ.4,66,998 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

பின்னர் ரூ.96,011 மதிப்பீட்டில் 1 இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், ரூ.40,047 மதிப்பீட்டில் 3 பயனாளிகளுக்கு திறன்பேசிகளையும், ரூ.45,780 மதிப்பீட்டில் 4 பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், ரூ.212000 மதிப்பீட்டில் 2 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு நாற்காலி, ரூ.55,600 மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு காதொலி கருவி, ரூ.17,560 மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு பிரெய்லி கடிகாரம் என மொத்தம் 40 மாற்றுதிறனாளி பயனாளிகளுக்கு ரூ.4,66,998 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 520 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தமிழ்நாடு மெர்க்கென்டைல் வங்கி துணைத் தலைவர் பாலமுருகன், பேச்சுப் பயிற்சியாளர் ராஜேஸ்வரி, உதவி துணைத் தலைவர் இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory