» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் சுவர் இடிப்பு எதிரொலி: போலீஸ் குவிப்பு
செவ்வாய் 3, டிசம்பர் 2024 10:37:20 AM (IST)
வேம்பாரில் நிலப் பிரச்சனையில் கோவில் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேம்பாரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுச்சுவர் கட்டும் பணி தொடங்கியபோது அருகில் உள்ள தேவாலயத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தினர் நிலப்பிரச்சினையை சுட்டிக்காட்டி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை சார்பில், கோவில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அனுமதி அளித்து அதற்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து சுற்றுச் சுவர் கட்டும் பணி நடந்தது. இந்நிலையில், சுற்றுச்சுவரை, சிஎஸ்ஐ கிறிஸ்தவ அமைப்பினர் மற்றும் அவர்களை சார்ந்த சிலர் நேற்று இரவு 10:30 மணி அளவில் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை எடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சூரங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் விளாத்திகுளம் டிஎஸ்பி அசோகன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
TamilanDec 3, 2024 - 01:17:49 PM | Posted IP 162.1*****