» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுரா கோட்ஸ் மில் தொடர்ந்து இயங்கும் : ஆலை நிர்வாகம் தகவல்
செவ்வாய் 3, டிசம்பர் 2024 10:22:39 AM (IST)
தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் தொடர்ந்து இயங்கி வருவதாக ஆலை நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் மதுரா கோட்ஸ் மில் இயங்கி வருகிறது. நூற்றாண்டுகளை கடந்து தமிழ சுத்தின் மேலும் சில இடங்களில் இயங்கி வரும் இந்த மில்லில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடி மில் மூடப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இதனை ஆலை தரப்பினர், தொழிற்சங்கத்தினர் மறுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ் ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது எனவும், பகல் நேரம் முழுவதும் ஆலை தேவையை பொறுத்து வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது, என்று ஆலை தரப்பினரும், தொழிற்சங்கத்தின் நிர்வாகிகளும் தெரிவித்தனர். மேலும் மதுரா கோட்ஸ் ஆலை மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை தொழிலாளர்கள் உள்ளிட்ட யாரும் நம்ப வேண்டாம். தூத்துக்குடியின் முக்கிய அடையாளமாக விளங்கும் ஆலை தொடர்ந்து இயக்கத்தில் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
veerakumarDec 3, 2024 - 10:44:48 AM | Posted IP 162.1*****
மில்ல மூடப்போறாங்கனு செய்தி போட்டதே நீங்க தானே
veerakumarDec 3, 2024 - 10:44:49 AM | Posted IP 172.7*****