» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கடலில் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:26:39 AM (IST)



திருச்செந்தூர் கோவில் கடல் உள்வாங்கி காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் பழங்கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல் பகுதியானது அமாவாசை மற்றும் பவுர்ணமி தினங்களில் உள்வாங்கி காணப்படுவது வழக்கமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக அமாவாசை தினத்தையொட்டி கடல் உள்வாங்கி காணப்பட்டது. அப்போது பெரிய கல்வெட்டு ஒன்று தென்பட்டுள்ளது. அதை பக்தர்கள் தூக்கி பாறையின் மேல் வைத்து சென்றனர்.

இதுபற்றி அறிந்த நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேற்று முன்தினம் கடற்கரைக்கு நேரில் வந்து, கல்வெட்டை ஆய்வு செய்தனர். பின்னர் சுதாகர் கூறியதாவது: கல்வெட்டில் மைதா மாவை தடவி அதில் உள்ள எழுத்துக்களை தெளிவுபடுத்தி படித்ததில் மாதா தீர்த்தம் என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் இந்த தீர்த்தத்தில் பங்கேற்றால் எல்லா சவுபாக்கியங்களும் கிடைக்கும் என பேச்சு நடையில் எழுதப்பட்டிருந்தது. அந்த கல்வெட்டில் மொத்தம் 15 வரிகள் இருந்தன. 

இவை கடந்த 50 ஆண்டுகள் முதல் 100 ஆண்டுகளுக்குள் இருக்கும் பழங்கால கல்வெட்டாக இருக்கலாம். மேலும் அய்யா வைகுண்டர் அவதாரபதி கோவில் அருகில் மற்றொரு கல்வெட்டை ஆய்வு செய்தோம். அதன் மேல் பகுதியில் எழுத்துக்கள் எதுவும் இல்லை. பொதுமக்கள் உதவியுடன் அதனை திருப்பி பார்த்தபோது எழுத்துகள் இருந்தன. அதில் பிதா தீர்த்தம் என தொடங்கி 17 வரிகள் இருந்தன. நாழிக்கிணறு அருகே தென்பகுதியில் ஆய்வு செய்தால் பிற நல்ல தண்ணீர் தீர்த்த கிணறுகளை அறிந்து கொள்ளலாம். நல்ல தண்ணீர் தீர்த்தங்களை ஆய்வு செய்தால் பக்தர்கள் பயன்பாட்டிற்கு உகந்தாக இருக்கும் என்றார்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory