» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புனித சவேரியார் ஆலய திருவிழாவில் நற்கருணை பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
செவ்வாய் 3, டிசம்பர் 2024 8:09:40 AM (IST)
தூத்துக்குடி புனித சவேரியார் ஆலய திருவிழாவின் ஒன்பதாம் நாள் விழாவை முன்னிட்டு நற்கருணை பவனி நடைபெற்றது.
தூத்துக்குடி டி. சவேரியார்புரம் தூய சவேரியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 136வது ஆண்டு திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு திருப்பலிகள் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் 9ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று இரவு நற்கருணை பேழை பவனியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பவனியாக சென்றனர். பின்னர் பங்குத்தந்தை குழந்தை ராஜா தலைமையில் நற்கருணை ஆசீர்வாத திருப்பலி நடைபெற்றது.