» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறக்க வேண்டும் : பாஜக கோரிக்கை
செவ்வாய் 3, டிசம்பர் 2024 7:40:23 AM (IST)
தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலையிடம் தெற்கு மாவட்ட பாஜக வலியுறுத்தியுள்ளது.
ரூ.381 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி விமானநிலைய விரிவாக்கப் பணி நடைபெற்று முடியும் தருவாயில் உள்ள நிலையில் விமான நிலைய திறப்பு விழாவிற்கு பாரதப் பிரதமர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு நேரடியாக வருகை தந்து நாட்டுமக்களுக்கு இந்த விமான நிலையத்தை அர்பணிக்க அழைப்பு விடுக்கவும், தூத்துக்குடியில் இருந்து மும்பை மற்றும் டெல்லிக்கு நேரடி விமான சேவையை துவங்கவும் பரிந்துரை செய்ய கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
SuperDec 3, 2024 - 01:21:30 PM | Posted IP 162.1*****