» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் இளைஞர் சடலம் மீட்பு : போலீஸ் விசாரணை
திங்கள் 2, டிசம்பர் 2024 8:49:31 PM (IST)
சாத்தான்குளம் அருகே பூட்டிய வீட்டில் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் சடலத்தை அழுகிய நிலையில் போலீசார் மீட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுரு மகன் சிவபெருமாள் (28). இவரது தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து போனார். அவரது தாயார் கடந்த ஆண்டு இறந்து போனார். இரு தங்கைகள் திருமணமாகி வெளியூரில் உள்ளனர். வெளியூரில் மளிகை கடையில் வேலை பார்த்து வந்த சிவபெருமாள் தாயார் இறந்த பின் ஊரில் இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாலை சிவபெருமாள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனை பார்த்த கிராம மக்கள் சாத்தான்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் உதவி ஆய்வாளர்கள் எட்வின், டேவிட் மற்றும் போலீசார் விரைந்து வந்து பூட்டிய நிலையில் இருந்த சிவபெருமாள் வீட்டின் பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது சிவபெருமாள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதும் அவர் இறந்து.
3 நாள்களுக்கு மேல் இருக்கும் என்பதால் அழகிய நிலையில் தூர்நாற்றம் வீசியதும் தெரியவந்தது. உடன் போலீசார் அழுகிய நிலையில் இருந்த சிவபெருமாள் சடலத்தை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிந்து சிவபெருமாள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என விசாரித்து வருகின்றனர்.