» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பள்ளி மாணவர்களுக்கு புகைப்பட கலை பயிற்சி : மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்
திங்கள் 2, டிசம்பர் 2024 8:14:21 PM (IST)
தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ மாணவியர்களுக்கான இலவச புகைப்பட கலை பயிற்சியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில், மாணவ மாணவியர்களுக்கான இலவச புகைப்பட கலை பயிற்சியை சிடார் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் மற்றும் புகைப்பட கலை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.