» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டிச.27ல் ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!
திங்கள் 2, டிசம்பர் 2024 4:22:39 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட "ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநில அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் / பணியிலிருக்கும் போது மரணமடைந்தவர்கள் ஆகியோரது ஓய்வூதியம் மற்றும் இதர ஓய்வு கால பலன்கள் பெறுவதில் ஏற்படுகின்ற குறைகளை நேரடியாக கேட்டறிந்து அவர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றும் பொருட்டு "ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்" தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 27.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தலைமையில் சென்னை, ஓய்வூதிய இயக்குநர் அவர்களால் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் அவர்களது ஓய்வூதியம் தொடர்பான குறைகளை (1) கடைசியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பதவி மற்றும் அலுவலகத்தின் பெயர் (2)ஓய்வு பெற்ற நாள் (3)ஓய்வூதிய கொடுப்பாணை எண் (4)ஓய்வூதியம் பெற்றுவரும் கருவூலத்தின் பெயர் (5)வீட்டு முகவரி (6)தொலைபேசி / கைபேசி எண் (7)கோரிக்கை விபரம் (8)கோரிக்கை எந்த அலுவலரிடம் நிலுவையிலுள்ளது? போன்ற விபரங்களுடன் 09.12.2024ம் தேதிக்குள் "மாவட்ட ஆட்சியர். கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101" என்ற முகவரிக்கு வந்து சேரும்படி "இரண்டு பிரதிகளில்" விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
09.12.2024க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், விண்ணப்பித்த ஓய்வூதியதாரர்கள் 27.12.2024 அன்று காலை 10:30 மணிக்கு நடத்தப்படும் ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.