» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதிச்சநல்லூரில் மதுரை வழக்கறிஞர்கள் பார்வை

ஞாயிறு 24, நவம்பர் 2024 8:35:22 PM (IST)



மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம், கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களை பார்வையிட்டனர்.

மதுரை குறிஞ்சிக்கூடல் வரலாற்று அமைப்பு 68 வது வரலாற்றுப் பயணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்துக்கு வருகை தந்தனர். இவர்கள் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் வழக்கறிஞர் குடும்பத்தினை சேர்ந்த 40 பேர் பயணித்தனர். இந்த பயணத்தில் இவர்கள் முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம், ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம், கிருஷ்ணாபுரம் கலை சிற்பங்களை பார்வையிட்டனர். 

இந்த குழுவிற்கு குறிஞ்சிக்கூடல் அமைப்பாளர் வழக்கறிஞர் பெ.கனகவேல் தலைமை வகித்தார்.  ஆதிச்சநல்லூரில் நடந்த தொல்லியல் கருத்தரங்கில் இந்த குழுவினர் கலந்து கொண்டனர். அங்கு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கலந்து கொண்டு ஆதிச்சநல்லூர் குறித்து பேசினார். தொல்லியல் ஆய்வு மாணவர்கள் ராஜேஷ், அருணகுமார், சங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். இந்த குழுவினர் ஆதிச்சநல்லூர் பி சைட் மற்றும் சி சைட்டை பார்வையிட்டனர். அதன் பின் கிருஷ்ணாபுரம் கோயில் சென்று அங்கே கலை சிற்பங்களை பார்வையிட்டனர். இந்த குழுவில் ஒருங்கிணைப்பாளர்கள்  ராஜேந்திரன், நாகலிங்கம், பழனியாண்டி, கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory