» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம்

ஞாயிறு 24, நவம்பர் 2024 8:17:24 PM (IST)



ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம் குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம் ஸ்பிக்நகர் மருத்துவமனையில் நடந்தது.                 

தூத்துக்குடி ஸ்பிக்நகர் ரோட்டரி சங்கம், ஏ.எம் பவுண்டேசன், சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை சார்பில் 7ம் ஆண்டு குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாம்  ஸ்பிக்நகர் மருத்துவமனையில் நடந்தது. முகாமிற்கு ஸ்பிக் நகர் ரோட்டரி சங்க தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் கண்ணன், முகாம் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி சங்க செயலர் ராமசுப்பு அனைவரையும் வரவேற்றார்.

குழந்தைகளுக்கான இருதய மருத்துவ பரிசோதனை முகாமினை ஸ்பிக் நிறுவனத்தின் முழு நேர இயக்குநர் பாலு,ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஷாஜகான் ஆகியோர் தொடங்கி வைத்தனர். சென்னை அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர் மகிதா தலைமையிலான  மருத்துவகுழுவினர் 70 குழந்தைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் 17 குழந்தைகள் மேல் கிசிக்சை பெற சென்னை அப்பல்லோ மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

ரோட்டரி சங்க பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறினார். இதில் ஏ.எம் பவுண்டேசன் நிரிவாகிகள், ஸ்பிக்நகர் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் தேநீர் மதிய உணவு வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors



Thoothukudi Business Directory