» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் விபத்தில் வழக்கறிஞர் மகன் உட்பட 2 பேர் பரிதாப சாவு

ஞாயிறு 24, நவம்பர் 2024 8:09:15 PM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வழக்கறிஞர் மகன் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை புளியமரத்து அரசடி கிராமத்தை சேர்ந்தவர் மூக்காண்டி மகன் முருகன் (53). இவர் இன்று மாலை 4 மணியளவில் தனது வீட்டில் இருந்து தூத்துக்குடிக்கு மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது வெள்ளப்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த வழக்கறிஞர் இக்னேஷியஸ் மகன் பகன் (27) முருகனுக்கு பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென முருகன் தனது பைக்கை வலது பக்கமாக திரும்பியபோது பின்னால் வந்த பகன் பைக் முருகன் பைக் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஹேமலதா சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேர் பிணத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத‌ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory