» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரேஷன் அரிசி விற்பனை செய்தால் குடும்ப அட்டை பறிமுதல் - காவல்துறை எச்சரிக்கை!

ஞாயிறு 24, நவம்பர் 2024 7:45:01 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில்  ரேஷன் அரிசியை வாங்கி அதனை சட்டவி ரோதமாக கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு குடும்ப அட்டை பறிமுதல் செய்யப்படும் என எஸ்பி ஆல்பர்ட் ஜான்  எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் நியாய விலைக் கடைகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி அதை வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தும் நபர்களுக்கு விற்பனை செய்வதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது.

எனவே இது போன்று ரேஷன் அரிசியை வீட்டில் பதுக்கி வைத்து சட்ட விரோத கடத்தலில் ஈடுபடும் நபர்களிடம் விற்பனை செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது குடும்ப அட்டை (Ration Card) பறிமுதல் செய்யப்படும் என்றும் மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory