» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!
வியாழன் 21, நவம்பர் 2024 11:50:03 AM (IST)
தூத்துக்குடியில் பைக்கில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள அத்திமரப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி பெருமாள்தாய் (60). இவர் தூத்துக்குடி மாநகரத்தில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் ரோட்டில் நின்று, அந்த வழியாக சென்ற ஒரு பைக்கில் லிப்ட் கேட்டு ஏறி சென்றார்.
திருச்செந்தூர் ரோடு மேம்பாலம் சத்யா நகர் அருகே செல்லும்போது நாய் ஒன்று குறுக்கே சென்றால் பைக்கில் சென்றவர் திடீர் பிரேக் போட்டார். இதில் பைக் பின்னால் அமர்ந்திருந்த பெருமாள் தாய் கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.