» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு : பக்தர்கள் மகிழ்ச்சி!
செவ்வாய் 28, ஜனவரி 2025 4:34:17 PM (IST)
குலசேகரன்பட்டினம் பகுதியில் முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
பிரசித்திப் பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலுக்கு சொந்தமாக பல இடங்களில் சொத்துக்கள் உள்ளது. கோயில் அருகே சப்பரம் மண்டபத்தையொட்டிய ரூ.1 கோடி மதிப்பிலான இடத்தை தனி நபர் ஆக்கிரமித்து கடை வைத்து நடத்தி வந்தனர்.
இந்த இடத்தை மீட்க கோயில் செயல் அலுவலர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலம் கோயிலுக்கு சொந்தம் என நீதிமன்றம் உத்திரவு பிறப்பித்தது. அதன்படி இன்று தூத்துக்குடி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, கோயில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது.
இதில் கோயில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், கோயில் ஆய்வர் முத்துமாரியம்மன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ்வரி, கணேசன், ஆர்.ஜ., முனீஸ்வரி, வி. ஏ.ஒ., வைரமுத்து, குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்.இன்ஸ்பெக்டர் முருகன், அந்தோணி துரைசிங்கம், கோயில் வழக்கறிஞர் கோபி, கோயில் கணக்கர் டிமிட்ரோ உட்பட பலர் உடனிருந்தனர். சுமார் ரூ.1 கோடி கோயில் நிலத்தை மீட்டெடுத்த அதிகாரிகளுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.