» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வியாபாரி உள்ளிட்ட 2 பேருக்கு சரமாரி வெட்டு: நண்பருக்கு போலீஸ் வலைவீச்சு

வியாழன் 30, ஜனவரி 2025 8:34:31 AM (IST)

கோவில்பட்டியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி உள்ளிட்ட 2 பேரை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய நண்பரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் முருகன் (44). காய்கறி வியாபாரி. இவர் பழைய காய்கறி மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார். தற்போது கடைகள் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருவதால், லோடு ஆட்டோவில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பாலு மகன் சங்கரலிங்கம் (48). கூலி தொழிலாளி. 

இவரது நண்பர் தச்சுத் தொழிலாளியான சங்கரநாராயணன் மகன் ஜெயபால் என்ற பாலசுப்பிரமணி (42). 3 பேரும் நேற்று முன்தினம் இரவு  3 பேரும் தெற்கு பஜாரில் உள்ள ஒரு கடையின் மாடியில் அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில், கை கலப்பாக மாறியுள்ளது. அப்போது பாலசுப்பிரமணி மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனை சரமாரியாக வெட்டியுள்ளார். 

அப்போது தடுக்க முயன்ற சங்கரலிங்கத்தையும் அவர் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயம் அடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் முருகன் தீவிர சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து வியாபாரி உள்ளிட்ட 2பேரை வெட்டி விட்டு தப்பி ஓடிய பாலசுப்பிரமணியை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory