» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.300 கோடியாக உயர்வு: நிர்வாக இயக்குநர் தகவல்

புதன் 29, ஜனவரி 2025 9:16:38 PM (IST)

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் 2024- 2025-ம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்துள்ளது. 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழுக் கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில், 2024-2025-ம் நிதியாண்டின் 3-ஆம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சலீ எஸ்.நாயர் வெளியிட்டார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  "தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபத்தில் 6% ஆண்டு வளர்ச்சியை அடைந்துள்ளது. இது எங்களது கடன் மற்றும் வைப்பு வணிகங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியால் அடையப்பட்டுள்ளது. எங்கள் கிளைகளை விரிவுபடுத்துவதிலும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த காலகட்டத்தில், முக்கிய நகரங்களில் 5 புதிய கிளைகளை திறந்து, எங்கள் விநியோக வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். 

மேலும், டெலாய்ட்(Deloitte), ஆரக்கிள்(Oracle) மற்றும் பஜாஜ் ப்ரோக்கிங்(Bajaj Broking) போன்ற நிறுவனங்களுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தி, டிஜிட்டல் மாயமாக்கல் மற்றும் செயல்திறன் மேம்பாட்டிற்கு, பல்வேறு துறைகளில் அவர்களின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்தியுள்ளோம், இது வாடிக்கையாளர் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. இவை போன்ற நடவடிக்கைகள், பொறுப்பான கடன் வழங்கல் மற்றும் முறையான risk management செயல்பாடுகளில் நமது கவனம் ஆகியவை, எதிர்காலங்களில் நிலையான மற்றும் லாபகரமான வளர்ச்சிக்கான பாதையை அமைக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்று தெரிவித்தார்.

வங்கி வளர்ச்சியின் சிறப்பம்சங்கள் (Year on Year) 

1. செயல்பாட்டு லாபம் ₹370 கோடியில் இருந்து ₹408 கோடியாக உயர்ந்து, 10% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

2. நிகர லாபம் 6% அதிகரித்து ₹284 கோடியிலிருந்து ₹300 கோடியாக உயர்ந்துள்ளது. 

3. வட்டி அல்லாத வருமானம் ₹158 கோடியிலிருந்து ₹189 கோடியாக உயர்ந்துள்ளது, இது 20% அதிகரித்துள்ளது. 

4. மொத்த வராக்கடன் 1.69% இலிருந்து 1.32% ஆகக் குறைந்துள்ளது, 37 bps மேம்படுத்தப்பட்டுள்ளது. 

5. நிகர வராக்கடன் 0.98% இலிருந்து 0.41% ஆகக் குறைந்துள்ளது, 57 bps மேம்படுத்தப்பட்டுள்ளது. 

6. PCR 41.93% இலிருந்து 69.07% ஆக அதிகரித்துள்ளது 

7. மொத்த கடன் தொகையில் SMA ஆனது 5.34% இலிருந்து 3.77% ஆக குறைந்துள்ளது, 157 bps குறைந்துள்ளது. 

8. CRAR % 25.95% இலிருந்து 29.35% ஆக அதிகரித்துள்ளது, 340 bps மேம்படுத்தப்பட்டுள்ளது. 

9. பங்கின் புத்தக மதிப்பு ₹484.25 இல் இருந்து ₹550.38 ஆக அதிகரித்துள்ளது 

10. மொத்த வணிக வளர்ச்சி 10% ஐ கடந்தது. 

வைப்புத்தொகை ரூ.46,799 கோடியில் இருந்து ரூ.50,392 கோடியாக உயர்ந்துள்ளது. 

கடன் தொகை ரூ.43,650 கோடியாக உயர்ந்துள்ளது. YoY அடிப்படையில் இது 13.71% வளர்ச்சியை எட்டியுள்ளது.

நிகர வட்டி வருமானம் ரூ.570 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.537 கோடியாக இருந்தது.) இது வளர்ச்சியாகும். 6.15% 

நிகரமதிப்பு (Networth) ரூ.8,715 கோடியாக உயர்ந்துள்ளது. (முந்தைய ஆண்டின் மூன்றாம் காலாண்டில் ரூ.7,668 கோடியாக இருந்தது) இது ரூ.1047 கோடி உயர்ந்து 13.65 % வளர்ச்சி அடைந்துள்ளது. 

RAM (சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்கள்) 91% யிலிருந்து 92%யாக உயர்ந்துள்ளது. 

வங்கியானது இந்த காலாண்டில் 5 புதிய கிளைகளை துவக்கியுள்ளது. 
புதிய முயற்சிகள் / மாற்றங்கள்: 

மூன்று முக்கிய துறைகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதன் மூலம் வங்கி அதன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது: 

1. Global NRI Center - வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிதித் தேவைகளுக்கு சேவை செய்ய அர்ப்பணிக்கப்பட்டது. 

2. Transaction Banking Group -இந்த குழுவானது திறமையான கார்ப்பரேட் 
வங்கி சேவைகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது, நடப்புக் கணக்கு, TASC மற்றும் அரசாங்க வணிகக் கணக்குகளை தொடங்குவதில் கவனம் செலுத்துகிறது. 

3. Credit Management Center ஒரு பிரத்யேக கடன் மேலாண்மை மையம்,  கடன் இடர் மதிப்பீடு மற்றும் மேலாண்மை செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory