» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)



நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஜ பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. 

கல்லூரியின் தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திரன் சார்லஸ் தலைமை தாங்கினார். முதல்வர் கோயில்ராஜ் ஞான தாசன் வரவேற்புரை நிகழ்த்தினார். எந்திரவியல் துறைத்தலைவர் பிரபாகர் வேதசிரோன்மணி ஆரம்ப ஜெபம் செய்தார். கல்லூரியின் வேலை வாய்ப்பு அலுவலர் மற்றும் ஆட்டோமொபைல் துறை தலைவர் ஜான் வெஸ்லி கம்பெனியை பற்றிய விளக்க உரையை வழங்கினார். 

கல்லூரியின் இந்த முகாமில் சென்னை மண்டோ ஆனந்த் கம்பெனியின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் நரேந்திர குமார், கோவிந்தராஜ், டெனுஷா ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் நிறுவனம் பற்றி மாணவர்களுக்கு சிறப்புரை நிகழ்த்தினார். இந்த முகாமில் தேர்வான 26 மாணவர்கள் மற்றும் 8 மாணவியர் வேலை வாய்ப்பு ஆணைகளைப் பெற்றனர். முடிவில் கல்லூரி பர்சர் தனபால் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் தலைமையில் முதல்வர் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors







Thoothukudi Business Directory