» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் லாரி டிரைவர் திடீர் மரணம் : போலீசார் விசாரணை

செவ்வாய் 28, ஜனவரி 2025 8:48:33 PM (IST)

தூத்துக்குடியில் லாரி டிரைவர் திடீரென இறந்தது தொடர்பாக போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்..
 
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகில் உள்ள முத்துராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் இவரது மகன் செல்வேந்திரன் (63), இவருக்கு தங்கத்தாய் என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். செல்வேந்திரன் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் உள்ள ஒரு லாரி செட்டில் தங்கி லாரியில் டிரைவராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். 

இன்று காலை தூத்துக்குடி புதிய துறைமுகம் மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள லாரி செட் முன்பு லாரியை நிறுத்திவிட்டு லாரியில் படுத்து தூங்கினார் அதிகாலையில் பார்க்க போது அவர் லாரியில் இறந்து கிடந்தார். இவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory