» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு பஸ் மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு!
செவ்வாய் 28, ஜனவரி 2025 8:52:28 PM (IST)
தூத்துக்குடியில் அரசு பேருந்து மோதி இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடி மாவட்டம், கீழத்தட்டப்பாறை வடக்குத் தெருவை சேர்ந்த பாலையா மகன் கொம்பையா (38). இவர் கோரம்பள்ளத்தில் உள்ள மரக்கடையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 25.10.2021 மேலத்தட்டப்பாறை விலக்கு அருகே மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்த போது திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடி நோக்கிய வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அன்றே இறந்து விட்டார்.
அவரது இறப்பு குறித்து அவரது மனைவி பிச்சம்மாள், அவரது பிள்ளைகள் மற்றும் பெற்றோர் தூத்துக்குடி 2வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வக்கில் ரவீந்திரன் மூலமாக ரூ.70,00,000 கேட்டு மனு தாக்கல் செய்தார்கள். மனுவை விசாரித்த நீதிபதி எம்.பிரீதா இறந்து போனவர் குடும்பத்தினருக்கு ரூ.25,18,000/-ம் அதற்கு மனு தேதி முதல் 7.5% வட்டியும் சேர்த்து அரசு போக்குவரத்துக்கழகம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.