» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தை அமாவாசை: முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்!

புதன் 29, ஜனவரி 2025 8:48:15 PM (IST)



தை அமாவாசை முன்னிட்டு முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
 
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் முறப்பநாடு மிக முக்கிய ஆன்மிக தலமாகும். தெட்சன காசி என்று இந்த இடத்தினை போற்றுவர். வடக்கிருந்து தெற்கு நோக்கி தாமிரபரணி பாயும் புண்ணிய பூமி. இவ்விடத்தில் நவகைலாயங்களில் நடு கைலாயம் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு மகா புஷ்கரத்தினையொட்டி இவ்விடத்தில் 6 லட்சம் «ப்ர் புனித நீராடினார்கள். 

இந்திய அளவில் முக்கிய நதிகளின் தீர்த்தக்கட்டங்களில் முறப்பநாடு காசி தீர்த்தக்கட்டமும் பிரமாதமாக பேசப்படுகிறது. இங்கு தை அமாவாசையை முன்னிட்டு அதிகாலை சிவகாமி சமேத கைலாசநாதர் கோயில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிசேகம் நடந்தது. அதன் பின் அலங்கார பூஜை நடந்தது. 5.30 மணிக்கே முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விட்டார்கள். முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க 50க்கு மேற்பட்ட புரோகிதர்கள் ஆற்றங்கரையில் கூடியிருந்தனர். 

கைலாசநாதர் ஆலயத்தில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமியை வணங்கினர். இதனால் முறப்பநாட்டின் ஊருக்கு வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. எனவே முறப்பநாடு போலிசார் போக்குவரத்தினை சீர் செய்ய வாகனங்களை மெயின்ரோட்டில் நிறுத்திவிட்டனர். தர்பணம் செய்து விட்டு அகத்தி கீரையை மாடுகளுக்குகொடுக்க வேண்டும் என ஐதீகம். எனவே பல இடங்களில் அகத்தி கீரைகடைகள் பெருகின.

சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கதினை சேர்ந்த கார்த்திகேயன், ராஜா ஆகியோர் கை ஒலிபெருக்கி மூலமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பிளாஸ்டிக் கைகளையும் துணிகளையும் ஆற்றில் போட விடாமலும் பணிசெய்ய வாய்ப்பு கிடைத்தது.

எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தாமிரபரணி முக்கியத்துவம் குறித்தும், நதியை மாசுப்படுத்தாமல் பக்தர்கள் புண்ணியத்தினை கொண்டு செல்லவேண்டும் என பரப்புரை செய்தார். பஞ்சாயத்து உதவியாளர் பாலாஜி அவர்களும் பிளாஸ்டிக் முழுவதையும் பூஜை செய்யும் அர்ச்சகர் கைபற்றிவிட வேண்டும். பிளாஸ்டிக்கை ஆற்றுக்குள் விடக்கூடாது என திட்டம் தீட்டி செயல்படுத்தினார்கள்.

ஆண்டுக்கு ஆண்டு பக்தர்கள் கூட்டம் பெருகி வரும் காரணத்தினால் வருங்காலத்தில் பக்தர்கள் நீராடுவதை மனதில் கொண்டு இந்த பகுதியில் தாமிரபரணி ஆற்றில் வளர்ந்திருக்கும் முள்செடிகளை அகற்றி, படித்துறையை சீராக அமைத்து தரவேண்டும்என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory