» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் : திருவட்டார் வட்டத்தில் ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு!
புதன் 20, நவம்பர் 2024 8:03:49 PM (IST)
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட பேச்சிப்பாறை அரசு உண்டு உறைவிட பழங்குடியினர் மேல்நிலைப்பள்ளிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று (20.11.2024) ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சிறப்பாக செயல்படத்தப்ட்டு வருகிறது. அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளியினை ஆய்வு மேற்கொண்டு, 10 வகுப்பு மாணவர்களை நேரில் சந்தித்து, தாங்கள் 9ம்வகுப்பில் எவ்வாறு படித்தீர்களோ அதுபோன்று 10 வகுப்பில் அதிகளவு கவனம் செலுத்தி அதிகளவு மதிப்பெண் பெற்று, இதன் வாயிலாக பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியினை பெற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் வாட்ஸ்ஆப், முகநூல், இன்ஸ்டகிராமில் அதிக நேரம் செலவழிக்கமால், இணையத்தளத்தினை கல்வி தொடர்பான சந்தேகங்கள் மற்றும் உயர்கல்வி தொடர்பாக மட்டும் பார்க்க வேண்டுமெனவும், ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் உங்களுக்கு பிடித்ததத்தில் கவனம் செலுத்த வேண்டுமென மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு, நோயாளிகள் அறை, பணியாளர்களின் வருகை பதிவேடு, சிகிச்சை பிரிவு, மகப்பேறு மற்றும் மகளிர் நலப் பிரிவு, சிகிச்சை மேற்கொள்ளும் அறை, பொது மருத்துவ பிரிவு, மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆய்வு மேற்கொண்டதோடு, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அக்கறையுடனும், பரிவுடனும் நடந்து கொண்டு சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பயிலும் மாணவியர்களை நேரில் சந்தித்து, குறைகளை கேட்டறிந்து கலந்துரையாடினார்கள்.
அதனைத்தொடர்ந்து திருவட்டார் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாலை சீரமைப்பு, மின்சார வசதி, குடிநீர் இணைப்பு, குளங்களை தூர்வாருதல், பேருந்து வசதி, முதியோர் உதவித்தொகை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், இலவச வீட்டுமனை பட்டா, குடும்ப அட்டையினை வறுமைக்கோட்டுக்கு கீழ் மாற்றுதல், வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை அளித்துள்ளார்கள்.
தகுதியான அனைத்து கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இன்று பெறப்பட்ட கோரிக்கை மனுவில் உடனடி நடவடிக்கையாக முத்தையன், ரமணி என்ற மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை (UDID) வழங்கப்பட்டது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நடைபெற்ற களஆய்வுகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டார்கள்.
ஆய்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கனகராஜ், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெங்கின் பிரபாகர், மண்டல இணை இயக்குநர் கால்நடை பாராமரிப்பு துறை இராதாகிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தபபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பாரதி, கூட்டுறவுத்துறை இணைபதிவாளர் சிவகாமி, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயமீனா, தோட்டகலைத்துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி இயக்குநர்கள் சத்தியமூர்த்தி (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), திருவட்டார் வட்டாட்சியர் கந்தசாமி, துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.