» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு நவ.23க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

புதன் 6, நவம்பர் 2024 8:35:03 AM (IST)

கோவில்பட்டி கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கு வருகிற 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் "அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கு கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்திற்கு உட்பட்ட முகவரியில் வசிக்கும் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காப்பீடு முகவர் பணிக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற, வேலைவாய்ப்பற்ற, சுய தொழில் செய்யும் இளைஞர்கள், முன்னாள் ஆலோசகர்கள், முன்னாள் ஆயுள் காப்பீடு முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி மற்றும் மகிளா மண்டல பணியாளர்கள், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர்கள், சுய உதவி குழுக்களில் செயல்படுவோர், கிராம தலைவர், கிராம சபை உறுப்பினர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். பாலிசிகள் பிரீமியம் அடிப்படையில் கமிஷன் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் முகவர்கள் மட்டும் ரூ.5 ஆயிரத்தை காப்பீட்டு தொகையாக தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திர வடிவில் செலுத்த வேண்டும். தங்களுக்கு ஏஜென்சி காலம் முடிக்கப்படும் போது காப்பீட்டு தொகையாக செலுத்தப்பட்ட பணமானது தகுந்த வட்டியுடன் திருப்பி வழங்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அதில் கூறப்பட்டுள்ள ஆவணங்களுடன் வருகிற 23-ஆம் தேதிக்குள், அஞ்சலக கண்காணிப்பாளர், கோவில்பட்டி கோட்டம், கோவில்பட்டி-628501 என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education

New Shape Tailors





Thoothukudi Business Directory