» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருக்குறள் ஒப்பித்து 2½ வயது சிறுவன் அபார சாதனை!
வெள்ளி 3, ஜனவரி 2025 8:17:54 AM (IST)
கோவில்பட்டியை சேர்ந்த 2½ வயது சிறுவன் 30 திருக்குறளை ஒப்பித்து சாதனை படைத்துள்ளான்.
கோவில்பட்டியை சேர்ந்த மு.சூர்யகுமார்-குருராம காயத்ரி தம்பதியரின் மகன் சுத்ன்ஷூ முத்ரன். (வயது 2½) சூர்யகுமார் கோவையில் தனியார் ஐ;.டி.கம்பெனியில் வேலை பார்க்கிறார். குருராம காயத்ரி சத்து மாவு தயாரிக்கும் சுய தொழில் செய்து வருகிறார். 2½ முத்ரன் சிறுவர் பள்ளியில் படித்து வருகிரான்/ இவனது நினைவாற்றல் திறன் அபாரம் பிரமிக்க வைக்கிறது.
அறிவுக்கூர்மையால் 30 திருக்குறள்களை மனப்பாடமாக வாசித்து பல இடங்களில் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான்.மாவட்ட அளவில் "சக்ஸஸ் அகாடமி” நடத்திய ஆன்லைன் திருக்குறள் போட்டியில் முதல் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான், அதற்கு பின்னர் திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், நெல்லை கற்பகவிருட்சம் நற்பணி மன்றம் இணைந்து நடத்திய திருக்குறள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசும் பாராட்டுகளும் கிடைக்கப்பெற்றான்.
கோவில்பட்டடி மகிழ்வோர் மன்றத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒரு முறை ஊர் பெயர் மற்றும் பிரபலமான பொருளின் பெயர் சொல்லி தமிழ்ச்சுடர் தாமல் கோ.சரவணனிடம் பரிசும் பாராட்டும் பெற்றுள்ளான். இரண்டாவது முறை திருக்குறள் கூறி ஞானத் தமிழ்ச் செல்வர் பேராசிரியர் முனைவர் வே.சங்கரநாராயணன் அவர்களிடமிருந்து பரிசும் பாராட்டும் பெற்றான். முத்ரன் 2வயதில் "Child dream boosterhub” நடத்திய நேஷனல் அளவிலான போட்டியில் 50 நொடிகளில் 25 விலங்குகளை அடையாளம் கண்டுபிடித்து பெயரை கூறியும் பரிசு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் தினத்தன்று FM Radio City ல் பேசியுள்ளான்.
சிறுவன் முத்ரன் தந்தை சூர்யகுமார், தாய் குருராம காயத்ரி மகன் திறன் ஆற்றல் பற்றி கூறியதாவது: 1½ வயதில் முத்ரன்,எங்கள் வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த விலங்குகளை அடையாளம் காண்பிக்க பழகினான். பிறகு உடல் உறுப்புகள், தமிழ் மாதங்கள், தமிழ் வாரங்கள், வார நாட்கள், மாதங்கள் என ஒவ்வொன்றாய் கற்றுக்கொள்ள ஆரம்பித்தான், இன்னும் கற்றுக்கொண்டு இருக்கிறான், எங்களால் முடியும் வரை அல்ல அவன் ஜெயிக்கும் வரை எவ்வளவு தூரத்திற்கும் அவனுக்கு அவன் ரசிக்கும் அளவிற்கு பயிற்சியளித்து அழைத்து செல்வோம் இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.