» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி எஸ்.ஐக்களுக்கு பிரிவு உபச்சார விழா : ஏ.எஸ்.பி.மதன் கொடுத்த சர்ப்ரைஸ்

ஞாயிறு 5, ஜனவரி 2025 12:05:50 PM (IST)



தூத்துக்குடி நகரில் பணியாற்றி வந்த காவல் உதவி ஆய்வாளர்கள், மாணிக்கராஜ், சுப்புராஜ், ஆகியோர் பணியிட மாறுதல்  செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா கொடுக்கும் வகையில் டவுண் ஏஎஸ்பி மதன் ஐபிஎஸ் கொடுத்த சர்ப்ரைஸ் மூலம்  போலீஸார்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்கு முக்காடினர். 

தூத்துக்குடி நகர காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் டாக்டர் மதன் ஐபிஎஸ். இவர் பொறுப்பேற்றதிலிருந்து டவுண் பகுதியில் நடைபெற்று வந்த பல்வேறு சமூக விரோத செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா விற்பனை கும்பல், ரேஷன் அரிசி கடத்தல் கும்பல், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்தும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த  மாணிக்கராஜ் தற்போது  புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அதுபோல் வடபாகம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்.ஐ  சுப்புராஜ் சிப்காட் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி டவுண் பகுதியில் பணியாற்றி வந்த 2 எஸ்.ஐக்களும் தற்போது ரூரல்  பகுதிக்கு இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி  மதன் ஐபிஎஸ் தனது அலுவலகத்திற்கு இரண்டு எஸ்ஐ களையும் வரவழைத்து  அவர்களுக்கு பிரிவு உபச்சார விழா ஒன்று நடத்தினார். 2 எஸ்.ஐ.க்களுக்கும் சால்வை அணிவித்து மதன் ஐபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். தனக்கு கீழ் பணிபுரிந்த சார்பு ஆய்வாளர்கள் பணி மாறுதல் சென்றாலும் அவர்களை மரியாதை செய்தும், கவுரவ படுத்தியும், ஊக்கப்படுத்தியும் வழியனுப்பிய தூத்துக்குடி நகர உதவி காவல் கண்காணிப்பாளரின் செயல் பாராட்டுக்குரியது. 


மக்கள் கருத்து

Petchimuthu RajJan 5, 2025 - 06:31:17 PM | Posted IP 162.1*****

Enakku velai venum

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital

New Shape Tailors




Thoothukudi Business Directory