» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கஞ்சா வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!
ஞாயிறு 5, ஜனவரி 2025 9:25:53 AM (IST)
கோவில்பட்டியில் கஞ்சா வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த கலியுகபெருமாள் மகன் கார்த்திக் (32). இவர் கஞ்சா கடத்தல் வழக்கில் கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரை செய்தனார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் உத்தரவின்பேரில், கார்த்திக்கை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்தனர்.