» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கட்டபொம்மன் பிறந்த நாள் விழா மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள்!!

ஞாயிறு 5, ஜனவரி 2025 12:00:23 PM (IST)



சிங்கிலிப்பட்டி, கல்குமியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சிங்கிலிப்பட்டி மற்றும் கல்குமியில்   மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266- வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பிள்ளையார் நத்தம் சாலையில் இந்த போட்டியானது நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டிக்கு  6 மைல் தூரம் எல்கை நிர்ணயிக்கப்பட்டு முதல் போட்டியாக சின்ன மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. 

போட்டியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30,க்கும் மேற்பட்ட ஜோடி மாடுகள் கலந்து கொண்டன இப்போட்டியை பாஞ்சை வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழக தலைவர் முருக பூபதி, செயலாளர் செந்தில், பொருளாளர் சௌந்தர், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன் மற்றும் N.வேடப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்லகுமார் ஆகியோர் கொடியசைத்து  துவக்கி வைத்தனர்.

இரண்டாவது போட்டியாக பூஞ்சிட்டு  மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு 5 மைல் தூரம் வெற்றி  இலக்காக  நிர்ணயிக்கப்பட்டது. மாட்டு வண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு விழாக மிட்டியினர் பரிசு தொகை சுழற் கோப்பை வழங்கினர். விழா ஏற்பாடு கிராம  தர்மகத்தாக்கள் முத்துக்கண்ணன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணியினர் செய்திருந்தனர். சாலையில் சீறிப்பாய்ந்த காளைகளை வழிநெடுகும் கைதட்டி உற்சாகப்படுத்தி பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory