» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருமணமான 26 நாட்களில் புதுமணப் பெண் தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை
வெள்ளி 3, ஜனவரி 2025 8:30:11 AM (IST)
கழுகுமலையில் திருமணமான 26 நாட்களில் புதுமணப் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் சண்முகமுதலியார் தெருவைச் சேர்ந்த பாண்டித்துரை மகள் செல்வி (21). இவருக்கும் கழுகுமலை தியாகராஜர் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சுரேஷ் என்பவருக்கும் கடந்த டிச. 5ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், பாண்டித்துரை ஜன. 1ஆம் தேதி கழுகுமலையிலிருந்த செல்வியை கைப்பேசியில் தொடர்பு கொண்டபோது, தான் நலமாக இருப்பதாக அவர் கூறினாராம்.
பின்னர், மாலையில் வீட்டின் மாடியிலுள்ள அறையில் செல்வி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாண்டித்துரை அளித்த புகாரின்பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 26 நாள்களே ஆன நிலையில் செல்வி தற்கொலை செய்துகொண்டதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெறுகிறது.