» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புன்னக்காயல் - ஆத்தூர் சாலையை சீரமைக்க வேண்டும் : பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை!
வெள்ளி 3, ஜனவரி 2025 7:59:59 AM (IST)
வெள்ளத்தில் முற்றிலும் பழுதாகி போக்குவரத்துக்கே லாயக்கற்ற புன்னக்காயல் - ஆத்தூர் சாலையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர், தமிழக முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தொகுதி அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "புயல் மற்றும் வெள்ளத்தில் முற்றிலுமாக சேதமாய் உள்ள புன்னக்காயல் முதல் ஆத்தூர் வரை உள்ள சாலையை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு சரி வேண்டும்.
இந்தப் பகுதி முற்றிலும் ஒதுக்கப்பட்ட பகுதியாக உள்ளது தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக உள்ளது வெள்ளநேரங்களில் அதிகம் இந்த பகுதி தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே தமிழக அரசு இதற்கு ஒரு நிரந்தர செய்து இந்த சாலைகளை நிரந்தரமாக சரி செய்ய வேண்டும் என்று மாநில பயணிகள்நலச் சங்க சாந்தகுமார் கோரிக்கை விடுவித்துள்ளார்.