» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி கோவிலில் முருகன் ரத யாத்திரை சிறப்பு பூஜை
வெள்ளி 3, ஜனவரி 2025 7:52:57 AM (IST)
கோவில்பட்டி தனுஷ்கோடிபுரம் பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் இருந்து 40க்கு மேற்பட்ட முருக பக்தர்கள் பாத யாத்திரையாக ரதத்துடன் திருச்செந்தூர் சென்றனர்.
இதனையொட்டி பள்ளி குழந்தைகளுக்கு மதியம் 12:00 மணிக்கு மகா அன்னதானத்தை கோவில் தலைவர் வெங்கடேஷ் தொங்கி வைத்தார். பின் மாலை 6:00 மணிக்கு ரதத்தில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை நடைப்பெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய சாமி செய்தார். ஏற்பாடுகளை ஸ்ரீசெந்தூர் அரசன் பாத யாத்திரை குழு செய்தனர். இதில் சுற்று வட்டார மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.