» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறிப்பு: 2 சிறுவர்கள் கைது!
வெள்ளி 3, ஜனவரி 2025 8:32:44 AM (IST)
தூத்துக்குடியில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடிவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணன்(50). ஆட்டோ டிரைவரான இவர், சில நாள்களுக்கு முன்பு தூத்துக்குடி மலர்ச் சந்தையில் பூக்கள் வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம நபர்கள் 4 பேர் அவரது கைப்பேசியைப் பறித்துக் கொண்டு தப்பியோடினராம்.
புகாரின்பேரில் மத்திய பாகம் போலீசார் வழக்குப் பதிந்தனர். 4 சிறுவர்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக, விசாரணையில் தெரியவந்தது. அவர்களில், 16, 17 வயதுடைய இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.