» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம்

வெள்ளி 25, அக்டோபர் 2024 8:57:12 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை சிறப்பாக செயல்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலர் உஷா தலைமை தாங்கினார். எம்பவர் இந்தியா நுகர்வோர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவத்தின் கௌரவ செயலாளர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ஆ.சங்கர் கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது :  

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் சிறப்பாக செயல்படுவதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதைப் பற்றியும், மாணவ மாணவிகளை வேளான் விளை கூடம், உழவர் சந்தை, ரேசன் கடைகள் போன்ற இடங்களுக்கு கூட்டிச் சென்று அவை செயல்படும் விதம் பற்றி எடுத்துரைக்கலாம் எனவும் கூறினார். மேலும் சிறப்பாக செயல்படும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களுக்கு மாநில அளவில் தமிழக அரசின் விருதுகளும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் ஆ.சங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அலுவலரின் நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன், கண்காணிப்பாளர் சாவித்திரி, எம்பவர் இந்தியா மேலாளர் லலிதாம்பிகை, தூத்துக்குடி மாவட்ட தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்; குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory