» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் விருது பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்!

வெள்ளி 25, அக்டோபர் 2024 4:52:21 PM (IST)

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் பல்வேறு பிரிவுகளில் வழங்கப்படவுள்ள தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கு விருதாளர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "வருகின்ற 03.12.2024 அன்று நடைபெறவுள்ள அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழ்நாடு அரசின் விருதுகள் (10 கிராம் எடையுள்ள தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்) பல்வேறு பிரிவுகளில்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படவுள்ளது. 

அதன்படி, சிறந்த பணியாளர் - சுயதொழில் புரிபவர் விருதுக்கு கை, கால் பாதிக்கப்பட்டோர் அல்லது தொழுநோயிலிருந்து குணமடைந்தோர், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் பாதிக்கப்பட்டோர், அறிவுசார் குறைபாடுடையோர், பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு, புறவுலகசிந்தனையற்றோர், குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு, மன நோய், இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு, இரத்த அழிவுச்சோகை, அரிவாளனு இரத்தச் சோகை, நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு திசு பண்முகக் கடினமாதல், நடுக்குவாதம், பல்வகை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளும், ஹெலன் கெல்லர் விருதுக்கு பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறைபுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களும், 

சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பித்தலில் சிறந்து விளங்குபவர்களும், சிறந்த சமூகப் பணியாளர் விருதுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைபுரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கான விருதுக்கும், மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனத்திற்கான விருதுக்கும், 

ஹெலன் கெல்லர் விருதுக்கு ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களும், ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பணியாற்றும் சிறந்த ஆசிரியர் விருதுக்கு அறிவுசார் குறைபாடுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு  சிறப்பாக பணியாற்றிய  ஓட்டுநர் மற்றும் நடத்துனர் விருதுக்கும், 

பொதுக்கட்டடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான தடையற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தியுள்ள  சிறந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான விருதுக்கும் விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் வருகின்ற 28.10.2024 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

வலைத்தளத்தில் விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 28.10.2024 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory