» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் கனிமொழி எம்.பி., ஆய்வு!

வெள்ளி 25, அக்டோபர் 2024 4:13:05 PM (IST)



திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடு பணிகளை கனிமொழி எம்.பி., ஆய்வு செய்தார்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் நவம்பர் 2ம்தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. 

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தங்குவதற்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்களுக்காக அமைக்கப்பட்ட கூடாரம், கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறவுள்ள இடங்கள், பேருந்து நிலையம், பொதுமக்களுக்குத் தேவையான தண்ணீர் வசதி, சுகாதார வசதி, மருத்துவ வசதி ஏற்பாடுகளை கனிமொழி எம்பி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் ஸ்ரீனிவாசன், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.அருள்முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து

ATHUOct 25, 2024 - 05:20:31 PM | Posted IP 172.7*****

தூத்துக்குடி to திருச்செந்தூர் சாலை சரியில்லை அதுல என்ன ஆய்வு? எல்லாம் சும்மா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors


Arputham Hospital




Thoothukudi Business Directory