» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையில் கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் : தூத்துக்குடி மாநகராட்சி எச்சரிக்கை!

வெள்ளி 25, அக்டோபர் 2024 5:40:15 PM (IST)

தூத்துக்குடியில் பொது இடங்களில் கால்நடைகளை திரியவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன் தெரிவித்துள்ளார்.

ஆணையர் லி.மதுபாலன்இது தொடர்பாக ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படுவதால் மாடுபிடிக்கும் பணியாளர்களைக் கொண்டு மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் பிடிக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விடாமல் அவரவர் வீட்டில் பராமரித்திட இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன்  தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

SenthilOct 25, 2024 - 06:10:16 PM | Posted IP 162.1*****

கிழக்கு கடற்கரை சாலையில், வட்டக்கோவில் மற்றும் சுந்த்ரவேல்புரம் பகுதியில் சுற்றும் மாடுகள் பற்றி எத்தனை முறை புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை. மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் சுகாதாரம் என்பதே இல்லாத ஒன்றாக உள்ளது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital





Thoothukudi Business Directory