» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

துாத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா : அக்.19-ல் கொடியேற்றம்!

வியாழன் 17, அக்டோபர் 2024 5:31:18 PM (IST)

துாத்துக்குடி, சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 19ஆம் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் அம்பாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, வருகிற 19ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.  

முன்னதாக அதிகாலை நடை திறக்கப்பட்டு, மஹா கணபதி ஹோம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் மாலை அம்மன் பல்வேறு அலங்காரங்களில், பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். 9ம் திருநாளான 27ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 10 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 

11ம் திருநாளான 29ம் தேதி (செவ்வாய்க்கிழமை) திருக்கல்யான வைபவம் நடக்கிறது. பூஜைகளை பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன், குரு, சண்முகம் ஆகியோர் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, ஆறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், பி.சாந்தி, விஎம் ஜெயலட்சுமி ஆகியோர் செய்து வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital



New Shape Tailors




Thoothukudi Business Directory