» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வல்லநாட்டில் நீரிழிவு நோயாளிகளுக்கான காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

வியாழன் 17, அக்டோபர் 2024 5:23:44 PM (IST)



வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கான காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் நீரிழிவு நோயாளிகளுக்கான நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம் இன்று வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்றது.

முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் அ.கிருஷ்ணஜோதி  தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.  மாவட்ட நலக்கல்வியாளர் முத்துகுமார், சித்த மருத்துவ அலுவலர் ச.செல்வகுமார் கண்காணிப்பாளர் இசக்கிமுத்து ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். முதுநிலை காசநோய் ஆய்வுக்கூட மேற்பார்வையாளர் ச.இசக்கி மஹாராஜன்  வரவேற்று பேசினார்.

இம்முகாமில் 20 நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. 19 நபர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.வல்லநாடு காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அ.அப்துல் ரஹீம் ஹீரா  நன்றி கூறினார்.

இம்முகாமில் உதவியாளர் ரமேஷ்வேல், எக்ஸ்ரே நுட்பனர்கள் கிறிஸ்டின் குமாரதாஸ், கிருஷ்டி, சுகாதார பார்வையாளர் முத்துலட்சுமி, இடைநிலை சுகாதார செவிலியர் ஜெயராதா, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் வேம்வன், முத்துவேல், டி.வி.எஸ்.சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளையின் கிராம வளர்ச்சி அலுவலர் தமிழ் குமார், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வல்லநாடு காசநோய் பிரிவு மற்றும் டி.வி.எஸ். சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை ஆகியோர்கள் இணைந்து செய்திருந்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital





Thoothukudi Business Directory