» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பூஜைப் பொருட்கள் திருட்டு : 4 பேர் கைது

சனி 21, செப்டம்பர் 2024 8:09:33 AM (IST)

ஆறுமுகநேரி சீனந்தோப்பு பார்வதி அம்மன் கோவிலில் ரூ.1லட்சம் மதிப்புள்ள பூஜைப் பொருட்கள், குத்துவிளக்கு, மணிகள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சீனந்தோப்பில் உள்ள பார்வதி அம்மன் கோயிலில் கடந்த மாதம் 25ஆம் தேதி அறைக் கதவுகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு 195 சிறிய குத்துவிளக்கு, 7 அடி குத்துவிளக்கு 4, மூன்றரை அடி குத்துவிளக்கு 21, 250 தீபகாண்டி, 10 கிலோ எடையுள்ள நான்கு தொங்கும் மணி, 35 கிலோ எடையுள்ள ஐந்து தொங்கும் மணி, 7 கிலோ எடையுள்ள தாம்பூலம் உள்ளிட்ட பித்தளை பொருள்கள் திருடு போயிருந்தது.

இதுகுறித்து கோயில் டிரஸ்டி செயலர் சோழர் செல்வின் (63) ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் செல்லத்துரை வழக்குப்பதிந்தார். ஆய்வாளர் ஷேக் அப்துல் காதர் விசாரித்தார்.

அதில், ஆறுமுகனேரி தெற்கு சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த முருகேசன் (59), சோனகன் விளை வேத கோயில் தெரு பலவேசம் மகன் சக்திவேல் (42),திருநெல்வேலி மாவட்டம் முனைஞ்சிப்பட்டி, சோமநாதபுரி பால் சந்திரசேகர் மகன் மரியமிக்கேல் (28), பேய்குளம் பழனியப்பபுரம் முருகன் மகன் அருண்குமார் (25) ஆகியோருக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory