» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி வழிபாடு : திரளான பக்தர்கள் தரிசனம்

சனி 21, செப்டம்பர் 2024 8:31:11 AM (IST)



தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். 

புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில், பக்தர்கள் விரதமிருந்து, பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டபதி பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, காலையில் கோ பூஜை, விஸ்வரூப தரிசனம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சத்தியநாராயணா அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். 

இன்று முதல் சனிக்கிழமை என்பதால் ஆயிரக்கணக்க பக்தர்கள் அதிகாலை முதலே சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் பூஜைகளை நடத்தினார். பக்தர்கள் காலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மந்திரமூர்த்தி, பாலசந்தர், முருகேஸ்வரி, ஜெயபால் ஆகியோர் செய்து இருந்தனர். பக்தர்களின் வசதிக்காக பந்தல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வரிசையாக செல்வதற்கு வசதியாக தடுப்புகளும் அமைக்கப்பட்டு உள்ளன.  மேலும் மத்திய பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory