» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சாலையின் நடுவில் செடிகள் வெட்டி அகற்றம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

சனி 21, செப்டம்பர் 2024 10:25:58 AM (IST)



தூத்துக்குடியில் சாலையின் நடுவில் உள்ள செடிகளை வெட்டி அகற்றுவதை மாநகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தூத்துக்குடி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகர் பகுதிகளில் பசுமையாக மாற்றுவதற்கு சாலையின் நடுவே செடிகள் வைத்து பராமரித்து வருவதற்கான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வாகனங்கள் வெளியேற்றும் கரும்புகையை இந்த செடிகள் உள்வாங்கி பொதுமக்களுக்கு சற்று தூய்மையான காற்றை தரும் என்ற அடிப்படையில் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் விளம்பர பலகைகள் வைப்பதற்காக சாலைகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள செடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர் சிவராமன் கூறுகையில், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாநகரை தூய்மையாக்க பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக சாலையில் நடுவே தடுப்புகள் அமைத்து செடிகளை உருவாக்கும் திட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் வாகனங்கள் வெளியேற்றும் கரும்புகையில் இருந்து வரும் பாதிப்புகளை தடுக்கிறது. ஆனால் சில தனியார் நிறுவனங்கள் விளம்பர பலகைகள் வைப்பதற்காக செடிகளை வெட்டி வருகின்றனர். இதனால் காற்று மாசு ஏற்படும், வெப்பநிலை அதிகரிக்கும். வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும்.  எனவே செடிகளை வெட்ட மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்க கூடாது. உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Sep 21, 2024 - 12:01:59 PM | Posted IP 162.1*****

சாலையில் நடுவே இந்த அரசியல்வாதிகள் விளம்பரம் பலகை தேவையா தூக்கி எரிந்து விடுங்கள், அது எல்லாம் நம்ம மக்கள் பணம், அரசியல்வாதிகள் கல் உடைத்து சம்பாதித்த பணம் அல்ல, ஸ்மார்ட் சிட்டி யை பார்த்தால் சவுதி பாலைவனதில் இருக்கும் சிமெண்ட் ரோடு மாதிரி இருக்கு. அங்கங்கே வெப்பம் அதிகமாக இருக்கு.

kannanSep 21, 2024 - 12:01:37 PM | Posted IP 172.7*****

குட் நியூஸ்

Asan-tutySep 21, 2024 - 12:01:26 PM | Posted IP 172.7*****

ஒரு தனியார் நிறுவனத்தின் விளம்பர வருமானத்திற்கு இப்படி செடி கொடி மரங்களை வெட்டுவதற்கு தூத்துக்குடி மாநகராட்சி தடை விதிக்க வேண்டும். ..

ஓ அப்படியாSep 21, 2024 - 11:58:32 AM | Posted IP 162.1*****

துட்டு நகராட்சி, எல்லாம் விளம்பரத்துக்காக பேனர் அமைக்க துட்டுக்காக செடியை பிடுங்கி இருப்பானுங்க சாக்கடை துட்டு பயலுக

வேடிக்கை மக்கள்Sep 21, 2024 - 11:56:51 AM | Posted IP 162.1*****

நம்ம மாநகராட்சியின் நிஜ பெயர் "மரம்புடுங்கி நகராட்சி" என்று அழைப்போம்

தமிழ்ச்செல்வன்Sep 21, 2024 - 11:24:56 AM | Posted IP 172.7*****

செடிகளை வெட்டி விட்டு அதில் எந்த விளம்பரத்தை வைகிறார்களோ, அந்த விளம்பரத்திலுள்ள வணிக நிறுவனத்தை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தால் புத்தி வரும். மற்ற நாடுகளில் அரசுக்கு மக்கள் அப்படித்தான் அமைதி வழியில் பாடம் புகட்டுகிறார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital






Thoothukudi Business Directory