» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கனிமொழி எம்பி நன்றி தெரிவிப்பு பயணம் : அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

சனி 21, செப்டம்பர் 2024 11:56:39 AM (IST)

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்பி நாளை (செப்.22) ஞாயிற்றுக்கிழமை  விளாத்திகுளம் தொகுதியில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதா ஜீவன் வெளியிட்ட அறிக்கை :  நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளராக கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு கனிமொழி கருணாநிதி போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெப்பாசிட் இழந்தனர். தன்னை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். அதன்படி 22.09.2024 ஞாயிற்றுக்கிழமை விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் மேற்கு ஒன்றியம், கோவில்பட்டி மேற்கு ஒன்றியம், மற்றும் ஒட்டபிடாரம் கிழக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகளில் கீழ்க்கண்ட இடங்களில் தன்னுடைய நன்றி அறிவிப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

22.09.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணி அளவில் புதூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கருப்பூர் கிராமத்தில் நன்றி தெரிவிக்கும் பிரச்சாரப் பயணத்தை தொடங்கும் அவர் தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு கடலையூர், 6.30 மணிக்கு எட்டையாபுரம், இரவு 7:00 மணிக்கு கீழஈரால் எப்போதும்வென்றான் நிறைவு செய்கிறார். 

இரவு 7:30 மணிக்கு இரவு 8:00 மணிக்கு பசுவந்தனையில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் கனிமொழி கருணாநிதி எம்பி, அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், I.N.D.I.A கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும் கேட்டுக்கொள்கிறேன். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்திடவும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital



Thoothukudi Business Directory