» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உண்டியலில் கோடி பணம் குவிந்தாலும் குப்பை எடுக்க ஆளில்லை... பக்தர்கள் வேதனை!

சனி 21, செப்டம்பர் 2024 3:45:37 PM (IST)



திருச்செந்துார் கடற்கரை பகுதியை தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாகம், மாசி விழா, கந்த சஷ்டி விழா, தேரோட்டங்கள் என ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் முருக பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் தோறும் உண்டியல்கள் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. தற்போது சுமார் 300 கோடி ரூபாயில் பல்வேறு திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க தொண்டர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியலில் கோடி பணம் குவிக்கிறது கடற்கரையில் குப்பை எடுக்க ஆளில்லை கழிவறை வசதியில்லை கடற்கரை முழுவதும் மனித மலக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இது தொடர்பாக அறநிலையத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 


மக்கள் கருத்து

ராஜாSep 21, 2024 - 04:28:35 PM | Posted IP 162.1*****

தொகுதி எம்.எல்.ஏ. பணம், பணம் என்று சாதித்துவிடலாம் என்று நினைக்கிறார். விடியல் விரைவில் வரும்

கடவுள் தான் காப்பாத்தணும்Sep 21, 2024 - 04:19:50 PM | Posted IP 162.1*****

"கடற்கரை முழுவதும் மனித மலக்கழிவுகள் குவிந்து கிடக்கின்றன" என்ன கருமம் இது கேட்கவே அசிங்கமாக இருக்கு. கடற்கரை பக்கம் போகவே அருவருப்பாக இருக்கு. திருந்துங்கடா சில முட்டாள் இந்துக்களே.

ராஜாராம்Sep 21, 2024 - 03:54:07 PM | Posted IP 172.7*****

அனிதா MLA மாற வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital









Thoothukudi Business Directory