» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 28ஆம் தேதி அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் : ஆட்சியர் தகவல்!

சனி 21, செப்டம்பர் 2024 4:10:33 PM (IST)

தூத்துக்குடியில் வருகிற 28ஆம் தேதி அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை சிறப்புற கொண்டாடும் வகையில் அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ஆம் தேதியன்று நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் 28.09.2024 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

போட்டிகள் 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவிகளுக்கு 15 கி.மீ. மற்றும் 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ. மாணவிகளுக்கு 15 கி.மீ. எனவும் நடைபெற உள்ளது. போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/-மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/-மும் நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.250/-மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

போட்டிக்கான விதிமுறைகள்: போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் சொந்த செலவில் இந்தியாவில் தயாராகும் சாதாரண மிதிவண்டிகளை கொண்டு வருதல் வேண்டும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தலைமையாசிரியரிடமிருந்து பெறப்பட்ட வயதுச் சான்றிதழுடன் 28.09.2024அன்று காலை 6 மணிக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கத்திற்கு வருகை தர வேண்டும்.

அறிஞர் அண்ணா மிதிவண்டிப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடையும்.போட்டியின் போது நேரும் எதிர்பாராத விபத்துகளுக்கும், தனிப்பட்ட பொது இழப்புகளுக்கும் பங்குபெறும் வீரர், வீராங்கனைகளே பொறுப்பேற்க வேண்டும் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-மும், இரண்டாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.3000/-மும், மூன்றாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.2000/-மும் நான்காமிடம் முதல் பத்தாமிடம் பெறுபவர்களுக்கு ரூ.1000/-மும் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital




Thoothukudi Business Directory