» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு!

வெள்ளி 20, செப்டம்பர் 2024 3:36:25 PM (IST)

தூத்துக்குடி அருகே உள்ள  ராஜாவின் கோவில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை ஜப்தி செய்ய தொழிலாளர் நல நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள ராஜாவின் கோவில் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி இவர் ராஜாவின் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனராக பணி புரிந்து வந்தார். இவரை பணி செய்ய தகுதி இல்லை என்று கடந்த 2007 ஆம் ஆண்டு அப்போதைய தலைவர் பணி நீக்கம் செய்தார்.

இதைத் தொடர்ந்து கென்னடி தூத்துக்குடி தொழிலாளர் நல அலுவலகத்தில் புகார் செய்தார். ஆனால் அதில் சமரசத் தீர்வு ஏற்படாததால் நெல்லையில் உள்ள தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த அப்போதைய நீதிபதி பாலசுப்ரமணியம் கடந்த 2012 ஆம் ஆண்டு உடனடியாக கென்னடிக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

ஆனால் ராஜாவின் கோவில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் கென்னடிக்கு பணி வழங்காமல் காலம் கடத்தி வந்தனர். இதைத் தொடர்ந்து மீண்டும் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் கென்னடி மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனிதரை விசாரணை செய்த நீதிபதி உடனடியாக வருகிற 9.10.2024 தேதிக்குள் ராஜாவின் கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க  உத்தரவிட்டார். இந்த வழக்கில் கென்னடிக்காக தூத்துக்குடி வழக்கறிஞர் ஐபி பாலசேகர் ஆஜரானார்.


மக்கள் கருத்து

m.sundaramSep 20, 2024 - 07:57:12 PM | Posted IP 172.7*****

Good Verdict. Then also due to ruling party influence, the order of the court will not be implemented.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital








Thoothukudi Business Directory