» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை!

புதன் 18, செப்டம்பர் 2024 8:12:05 PM (IST)



திருச்செந்தூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் வழங்கப்பட்டன. அவரது உடலுக்கு கோட்டாட்சியர் தலைமையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயாமொழி, ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் இசக்கிமுத்து (42). பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சத்யா. இவருக்கு குழந்தை இல்லை. இவர் வீரபாண்டியன்பட்டணம். சண்முகபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளார்.  கடந்த 14ம் தேதி காலை 6 மணிக்கு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து திருச்செந்தூர், குமாரபுரம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் படுகாயமடைந்த இவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக, மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு கடந்த 15ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் அவரது மனைவி விருப்பத்தின் படி இசக்கிமுத்துவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.

இதையடுத்து உறுப்புகள் தானம் செய்யப்பட்ட அவரது உடல் காயாமொழிக்கு இன்று காலை கொண்டு வரப்பட்டது. அரசு உத்தரவின் பேரில் இசக்கிமுத்துவின் உடலுக்கு திருச்செந்தூர் கோட்டாட்சியர் சுகுமாறன், தாசில்தார் பாலசுந்தரம், மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் மருத்துவர் பொன் ரவி, எஸ்.ஐ. பாபுராஜ் ஆகியோர் மாலை அணிவித்து அரசு சார்பில் மரியாதை செலுத்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory