» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி-தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரயில் : ஜன.19ம் தேதி இயக்கம்!
செவ்வாய் 14, ஜனவரி 2025 3:52:03 PM (IST)
பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி-தாம்பரம் இடையே சிறப்பு ரயில் வருகிற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரயில் வண்டி எண். 06168, தூத்துக்குடியில் இருந்து 19-01-2025. ஞாயிற்றுக்கிழமை மாலை 04-25 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 03-45 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.