» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆழ்வார் கற்குளம் கோவங்காடு இளைஞர்களுக்கு எஸ்.பி.பாராட்டு

செவ்வாய் 14, ஜனவரி 2025 9:06:00 PM (IST)



குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு புதிதாக 56 சி.சிடி.வி கேமராக்களை நிறுவிய அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆழ்வார்கற்குளம் பகுதியில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக 24 சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோன்று கோவங்காடு பகுதியில் ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோர் இணைந்து அப்பகுதியில் புதியதாக 32 சிசிடிவி கேமராக்கள் புதிதாக நிறுவியுள்ளனர்.

மேற்படி ஆழ்வார்கற்குளம் மற்றும் கோவங்காடு பகுதி ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து தங்கள் பகுதிகளில் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மொத்தம் 56 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். இச்செயலைப் பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல் அலுவலகத்தில் மேற்படி ஆழ்வார் கற்குளம் மற்றும் கோவங்காடு ஆகிய ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் 13 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory