» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெரு நாய் கடித்துக் குதறியதில் மரநாய் உயிரிழப்பு!
திங்கள் 13, ஜனவரி 2025 9:35:48 PM (IST)
சாத்தான்குளத்தில் தெரு நாய் கடித்துக் குதறியதில் மரநாய் பரிதாபமாக உயிர் இழந்தது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தச்சமொழி, ஜெப ஞானபுரம் பகுதியில் காட்டுப்பகுதியில் இருந்து வந்த மரநாய் ஒன்று கடந்த இரண்டு நாட்களாக வீடுகளில் புகுந்து கோழிகளைப் பிடித்து கொன்று வந்தது. இரவில் தெருக்களின் நடமாடும் கோழிகளையும் பிடித்து சென்றது. இந்நிலையில் நேற்று இரவு ஜெப ஞானபுரம் பகுதியில் உள்ள வீட்டில் கோழிகளை பிடிக்க வந்துள்ளது.
அப்போது அதே பகுதியில் நின்ற தெருநாய்கள் மர நாயை கடித்துக் குதறின. இதில் காயம் அடைந்த மரநாய் உயிரிழந்தது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் இறந்த மர நாயை படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளனர். இது சமூக வலைத்தளங்களை வைரல் ஆகி வருகிறது
காட்டில் வாழும் விலங்குகள் ஊருக்குள் வந்து தெரு நாய்கள் உள்ளிட்டவைகளால் உயிர் இழக்கும் சம்பவத்தை வனத்துறையினர் கண்டு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.