» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாத்தான்குளம் கோயில்களில் திருவாதிரை திருவிழா சிறப்பு பூஜை
திங்கள் 13, ஜனவரி 2025 9:31:36 PM (IST)
சாத்தான்குளம் கோயில்களில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தச்ச மொழி இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்தரும் ஸ்ரீ பெருமாள் சுவாமி கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை நடைபெற்றது. பூஜையை முன்னிட்டு ஸ்ரீ பெருமாள் சுவாமி, மாரியம்மன், சிவபெருமான், ஜெய் ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடைபெற்றது. அலங்கார தீபாராதனை நடைபற்றது.
பூஜையையொட்டி பக்தர்கள் அகல் விளக்கால் ஓம் என்ற மந்திரச்சொல்லை ஏற்றி வைத்திருந்தது பார்ப்பவரை கவர்ந்தது. சிவன் பார்வதி வடிவில் கோலங்கள் வரையப்பட்டிருந்தது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் தச்ச மொழி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் திருவாதிரை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பூஜை முன்னிட்டு முத்துமாரியம்மன் ,முத்தாரம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளாக பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர். இதே போல் சாத்தான்குளம் பகுதியில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருவாதிரை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.